இந்த நேரத்தில் பிறந்தநாள் வேண்டாம் - இதை செய்யுங்கள்!! த.வெ.க தலைவர் விஜய் உத்தரவு

Vijay Tamil nadu Kallakurichi Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jun 21, 2024 05:57 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

வேண்டாம்

அவரின் எக்ஸ் தளப்பதிவு வருமாறு,

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவு!

தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Vijay in Kallakuriichi

எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

கண்ணீர் துடைக்க வந்த த.வெ.க தலைவர் - காலில் விழுந்து கதறிய பெண்!! இதயம் கனக்கும் சம்பவம் !!

கண்ணீர் துடைக்க வந்த த.வெ.க தலைவர் - காலில் விழுந்து கதறிய பெண்!! இதயம் கனக்கும் சம்பவம் !!

நேரில் வந்த விஜய்

முன்னதாக தொடர்ந்து அதிகரித்து வரும் கள்ளக்குறிச்சி மரணங்கள் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Vijay in Kallakuriichi

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் விஜய் நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கட்சியின் பொதுசெயலாளர் என்.ஆனந்தும் உடன் இருந்தார்.