கொரோனா கால நிதியில் ரூ 3000 கோடி முறைகேடு- சிக்கலில் எடியூரப்பா?
கொரோனா கால நிதியில் ரூ 3000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
சித்த ராமையா
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்த ராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது . இதில் எடியூரப்பா ஆட்சி குறித்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில், கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கொரோனா கால நிதியில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில் 7,224 கோடி ரூபாய் செலவினத்தை ஆணையம் ஆய்வு செய்ததில் முறைகேடு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், பல கோப்புகள் காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேடு
மேலும் தவறாகப் பயன்படுத்திய 500 கோடி ரூபாய் வசூலிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறியுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் சித்த ராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றவியல் நோக்கமும் சம்பந்தப்பட்டிருப்பதால், சிறப்பு விசாரணைக் குழு மற்றும் அமைச்சரவை துணைக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றவியல் நோக்கமும் சம்பந்தப்பட்டிருப்பதால், சிறப்பு விசாரணைக் குழு மற்றும் அமைச்சரவை துணைக் குழுவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் எடியூரப்பாவிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.