சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற எடியூரப்பா கடந்து வந்த வாழ்க்கை வரலாறு..!

BJP Karnataka B. S. Yediyurappa
By Thahir Jun 07, 2023 12:38 PM GMT
Report

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

6 முறை தொடர்ந்து MLA

கர்நாடகா மாநிலம் மாண்ட்யா மாவட்டம் கே.ஆர்.பேட் தாலுக்காவில் உள்ள பொக்கனாகரே என்கிற கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவர் எடியூரப்பா.

b.s.yeddyurappa history in tamil

பட்டப்படிப்பு முடித்த பிறகு ரைஸ்மில் ஒன்றில் கிளர்க் பணியில் சேர்ந்தார். அப்போதே ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

1972 ஆம் ஆண்டு கே.ஆர் பேட் தாலுக்கா ஜனசங் தலைவராக பொறுபேற்றார். 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 45 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1983 ஆம் ஆண்டு முதல் 6 முறை தொடர்ந்து ஷிகாரிபுரா தொகுதியில் இருந்து கர்நாடக மாநில சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சரான எடியூரப்பா 

1988 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராகி 1994 ஆம் ஆண்டு எதிர்கட்சித் தலைவர் ஆனார்.

2004 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் தரம்சிங் முதலமைச்சராக இருக்கையில் அவரை பதவியிலிருந்து அகற்ற பல யுக்திகளை கையாண்டார்.

இதற்காக ஹெச்.டி.தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தார். ஒப்பந்தப்படி முதல் 20 மாதங்கள் மதச் சார்பற்ற கட்சித் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

பின்னர் 20 மாதங்கள் முடிந்த நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக குமாரசாமி மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எடியூரப்பா குமாரசாமிக்கு அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றார்.

b.s.yeddyurappa history in tamil

இருந்த போதும் இரு கட்சிகளும் மீண்டும் சமதானம் பேசினர். 2007 ஆம் ஆண்டு குமாரசாமி ஆதரவுடன் எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.

லஞ்ச வழக்கில் சிறைக்கு சென்ற முதலமைச்சர் 

2011 ஆம் ஆண்டு மீண்டும் எடியூரப்பாவுக்கும் குமாரசாமிக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் குமாரசாமி தனது ஆதரவை விலகி கொண்டதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

இந்த நிலையில், தாது சுரங்கங்களுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் எடியூரப்பா பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எடியூரப்பா இந்த வழக்கில் சிறைக்கு செல்ல கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் சிறை தண்டனை பெற்ற முதல் கர்நாடக முதலமைச்சர் என்ற அவப்பெயர் எடியூரப்பாவுக்கு கிடைத்தது. இதனால் சுமார் 20 நாட்கள் சிறையில் இருந்தார்.

மர்மமான முறையில் மனைவி உயிரிழப்பு 

கடந்த 2012 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய எடியூரப்பா கர்நாடக ஜனதா பக் ஷா என்ற தனிக்கட்சி தொடங்கினார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தன் கட்சியை பாரதிய ஜனதாக கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் 2019 ஆண்டு மீண்டும் கர்நாடகா முதலமைச்சராக 2 ஆண்டுகள் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பாவுக்கு மித்ரா தேவி என்ற மனைவி உண்டு. 2004-ம் ஆண்டு ஷிமோகோவாவில் உள்ள வீட்டில் கிணறு அருகே மித்ராதேவி மர்மமான முறையில் இறந்தகிடந்தார்.

இவருக்கு அருணாதேவி, பத்மாதேவி, உமாதேவி என்ற மூன்று மகள்களும், ரகவேந்திரா, விஜயேந்திரா என்கிற இரு மகன்களும் உண்டு.