எடியூரப்பா மீது போக்சோ வழக்கு - மைனர் பொண்ணுக்கு பாலியல் தொல்லை
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதவி கேட்டு
கல்விக்காக உதவி கேட்டு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தாயாருடன் எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளார் மைனர் பெண் ஒருவர். அப்போது எடியூரப்பா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
தனி அறைக்கு இழுத்து சென்று பாலியல் தொல்லை அளித்தார் எடியூரப்பா என அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களுருவை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது பெங்களுரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் ஐபிசி பிரிவு 354 (A) பிரிவின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பா மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் சலசலப்பை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.