முதன் முறையாக இந்தியா வரும் ஸ்பெயின் அதிபர் - குஜராத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு!

Narendra Modi Spain India
By Vidhya Senthil Oct 25, 2024 05:37 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

     ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

பிரதமர் மோடி

‘பிரிக்ஸ்’ (BRICS)மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில்  22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுப் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.

முதன் முறையாக இந்தியா வரும் ஸ்பெயின் அதிபர் - குஜராத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு! | Spanish President Coming To India On A 2 Day Visit

இந்த பயணத்தின் போது,பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளடக்கிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸை சந்தித்தார்.

சண்டை முடியுமா? 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி!

சண்டை முடியுமா? 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி!

அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பு ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வரவுள்ளார்.

   ஸ்பெயின்  அதிபர்

இந்த பயணத்தின்போது அதிபர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.அதன் பின்னர் ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்பட்டுள்ள சி295 விமான ஆலையை மோடியும்,

BRICS conference

பெட்ரோ சான்செசும் இணைந்து திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மோடி-பெட்ரோ சான்செஸ் சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.