அம்பானியின் கார் ஓட்டுநருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க!

Reliance India Mukesh Dhirubhai Ambani Anil Ambani Nita Ambani
By Swetha Oct 24, 2024 02:00 PM GMT
Report

அம்பானியின் கார் ஓட்டுநருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று பார்கலாம்.

கார் ஓட்டுநர்

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர் முகேஷ் அம்பானி.ரிலையன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அவர் திரம்பட செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவரது இளைய மகனின் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றதில் அது உலகளவில் அவரை பிரபலமானவராக மாற்றியது.

அம்பானியின் கார் ஓட்டுநருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க! | Do You Know How Much Ambanis Driver Monthly Salary

இந்த நிலையில், முகேஷ் அம்பானி தனது ஊழியர்களுக்கு சிறப்பான ஊதியம் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு , சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றில், முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநருக்கு மாதம் ரூ. 2 லட்சம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

அதாவது ஆண்டு சம்பளம் குறைந்தது ரூ.24 லட்சம் என தெரியவந்தது. இந்த காலக்கட்டத்தில் இது மேலும் அதிகரித்திருக்கலாம். இந்த தொகை இந்தியாவின் பல்வேறு மிகப்பெரிய நிறுவனங்கள் அவர்களின் உயரதிகாரிகளுக்கு வழங்கும் சம்பளமாகும்.

ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் குடும்பத்திற்கு ஓட்டுனராக இருப்பது எளிதான வேலை அல்ல. இங்கு பணிப்புரியும் ஓட்டுநர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்டு கடுமையான பயிற்சி பெறுகின்றனர்.

முகேஷ் அம்பானியின் மகன், மருமகளிடம் இவ்வளவு காஸ்ட்லி பொருட்களா? அவங்க பர்ஸ் விலை தெரியுமா?

முகேஷ் அம்பானியின் மகன், மருமகளிடம் இவ்வளவு காஸ்ட்லி பொருட்களா? அவங்க பர்ஸ் விலை தெரியுமா?


சம்பளம் 

இவர்கள் வணிக மற்றும் சொகுசு வாகனங்கள் இரண்டையும் கையாள்வதில் வல்லுநர்களாக இருப்பார்கள் மற்றும் சவாலான சாலைகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் வாகனத்தை செலுத்த எப்போதும் தயாராக இருப்பார்கள்.

அம்பானியின் கார் ஓட்டுநருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க! | Do You Know How Much Ambanis Driver Monthly Salary

அம்பானி குடும்பத்திற்கு ஓட்டுநர்களை வழங்கும் குறிப்பிட்ட ஏஜென்சி பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை இருப்பினும், அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு வரும்போது எந்த குறையும் வைப்பதில்லை எனப்படுகிறது.

சம்பளம் மட்டுமின்றி ஆரோக்கிய காப்பீடு, ஓட்டுநர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான கல்வி ஆதரவு போன்ற கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகிறது. மேலும், அம்பானி வீட்டின் சமையல்காரர்கள்,

மற்றும் காவலாளிகள் முதல் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் வரை அனைத்து ஊழியர்களும் தாராளமான சம்பளம் மற்றும் காப்பீட்டு பலன்களை வழங்குவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.