Wednesday, Apr 30, 2025

முகேஷ் அம்பானியின் மகன், மருமகளிடம் இவ்வளவு காஸ்ட்லி பொருட்களா? அவங்க பர்ஸ் விலை தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani
By Sumathi 2 years ago
Report

முகேஷ் அம்பானியின் மகன், மருமகளுக்கு சொந்தமான ஏராள விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன.

முகேஷ் அம்பானி

இந்திய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது தந்தை திருபாய் அம்பானியின் சொத்து மதிப்பை பில்லியன்களாக மாற்றியுள்ளார். இதற்கு பக்க பலமாக இருந்தவர் அவரது மனைவி நீடா அம்பானி. சிறந்த நிர்வாக திறமையா கொண்டவர்.

முகேஷ் அம்பானியின் மகன், மருமகளிடம் இவ்வளவு காஸ்ட்லி பொருட்களா? அவங்க பர்ஸ் விலை தெரியுமா? | Akash Ambani And Shloka Own Costly Things

முகேஷின் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்கள் என அறியப்படுகிறது. இந்நிலையில், இவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி ஸ்லோகா மேத்தா ஆகியோர் வைத்திருக்கும் காஸ்ட்லி பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

விலையுயர்ந்த பொருட்கள்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் 2019 இல் ஆகாஷ்- ஸ்லோகாவுக்கு திருமணம் நடந்தது. இவர்கள் அன்டிலியாவில் வசித்து வருகிறார்கள். அங்கு 27 மாடிகள், 9 லிப்ட்கள், தியேட்டர்கள், 168 கார் காரேஜுகள் என உலகிலேயே அதிக மதிப்பிலான வீடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இங்கு பனிஅறையும் உள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன், மருமகளிடம் இவ்வளவு காஸ்ட்லி பொருட்களா? அவங்க பர்ஸ் விலை தெரியுமா? | Akash Ambani And Shloka Own Costly Things

வெயில் காலத்தில் அம்பானி குடும்பத்தினர் இங்கு நேரத்தை செலவிடுவார்களாம். இந்த வீட்டின் மதிப்பு 20 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது. இவர்களிடம் உள்ள கார்களின் மதிப்பு குறைந்த பட்சம் ரூ 60 லட்சம் கொண்ட பென்ஸ் முதல் 4 கோடி ரூபாய் கொண்ட ரேஞ்ச் ரோவர் வரை உள்ளது.

ஸ்லோகாவின் ஒரு பர்ஸ் விலையே ரூ 6 லட்சமாம். மேலும், 450 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை வைத்துள்ளார். இது அவரது மாமியார் நீடா அம்பானி பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.