முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு Z+ பாதுகாப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி
82.6 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ள முகேஷ் அம்பானி, உலகின் டாப் பணக்காரர்களில் 8வது இடத்தில் உள்ளார். இந்நிலையில், தங்களது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும்,
நாட்டுக்கு நிதி ரிதீயாக சீர்குலைப்பு ஏற்படுத்தும் விதமாக தங்களுக்கு தொடர் ஆபத்துகள் இருப்பதாகவும், தங்களுக்கு அம்பானி தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
Z+ பாதுகாப்பு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் Z+ பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. அச்சுறுத்தல்கள் இருப்பதாக உணர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கான செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். 55 பாதுகாவலர்கள், 10க்கும் மேற்பட்ட என்எஸ்ஜி கமாண்டோக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.