நிறைவடைந்த 18 வயது - ஸ்பெயின் பட்டத்து இளவரசியான லியோனார்!
லியோனார் அதிகாரபூர்வமாக பட்டத்து இளவரசியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
லியோனார்
ஸ்பெயினில் முடியாட்சி குடியரசு அமலில் இருந்து வருகிறது. இங்கு மக்கள் தேர்வு செய்யும் அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இருப்பினும், மன்னர் குடும்பத்திற்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நாட்டின் அரசராக 6வது பிலிப்பி இருந்து வருகிறார். ராணியாக லெட்டிசியா உள்ளார். இவர்களது மகள் இளவரசி லியோனார் டி தோடாஸ் லாஸ் சாண்டோஸ் டி போர்பான் ஒய் ஆர்ட்டிஸ்.
இளவரசி பட்டம்
தற்போது, இவருக்கு 18வது வயதை பூர்த்தியான நிலையில், அதிகாரபூர்வமாக இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வருங்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கிடையில், கடந்த 3 ஆண்டுகளாக ராணுவ பயிற்சி மேற்கொண்டார். இந்த கொண்டாட்டத்தில் பொதுமக்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இவரது தந்தை 6வது பிலிப்பி கடந்த 37 ஆண்டுகளாக மன்னராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.