நாட்டை விட்டு வெளியேறிய கத்தார் இளவரசி - அதிரவைக்கும் பின்புலம்!
கத்தார் இளவரசி குறித்த தகவல் ஒன்று பரவி தற்போது வைரலாகி வருகிறது.
கத்தார் இளவரசி
கத்தாரின் ஆளும் குடும்பமான அல்தானியின் உறுப்பினர்தான் இளவரசி. இவர் ஓரினச்சேர்க்கையாளர். இஸ்லாமியான நாடான இங்கு பல கடுமையான விதிகள் பின்பற்றப்படுகிறது. அதன்படி, தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தண்டிக்கப்படுவோம் என்று இளவரசி அச்சமடைந்துள்ளார்.
இதனால் அவர் வீட்டை வீட்டு வெளியேறினார். 2015 கோடையில் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடும்பப் பயணமாகச் சென்றார். அந்த நேரத்தில் அவள் தோழியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும், இதுகுறித்து தனது குழந்தைப்பருவம் மிகவும் சோதனையான காலமாக இருந்ததாக அதிகாரிகளிடம் கூறினார்.
ஓரினச்சேர்க்கை
தொடர்ந்து, 'நான் பெண்ணாகப் பிறந்தாலும் வளர்ந்து பின், என் உடலில் ஒரு மாற்றத்தைக் கண்டேன். இதற்குப் பிறகு நான் எனது உறவினர்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதேசமயம் கத்தாரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
அதனால்தான் பாதுகாப்பிற்காக வீட்டை விட்டு ஓடி வந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் கடுமையான சட்டங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஓரினச்சேர்க்கையாளராக சந்தேகிக்கப்பட்ட 2 செய்தியாளர்கள் அங்கு அண்மையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.