ஓரினச்சேர்க்கையாளர்: ஊசி மூலம் கர்ப்பமான இளம்பெண் - அதிர்ச்சி தகவல்!
இளம்பெண் ஒருவர் ஊசி மூலம் விந்தணுவை செலுத்தி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விந்தணு தானம்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஷானன் நசரோவிச்(23). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. டிக்டாக்கில் தாயாக இருக்கும் அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த ஊசியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறையை 'home insemination' எனத் தெரிவிக்கின்றனர். மேலும், தனக்கு சம்மதமுள்ளவர் விந்தணு தானம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். 3 மாதங்களுக்குள் விந்தணு நன்கொடையாளரைக் கண்டுபிடித்து விட்டதாகவும்,
கர்ப்பம்
அதிக நேரம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம். மேலும், 'கால்போல் ஊசி மூலம் கர்ப்பமாக ஆக முடியும் என்று மக்கள் இன்னும் நம்பவில்லை.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, அது வேலை செய்கிறது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அது எனது மகள் என உறுதியாக பேசியுள்ளார்.