உடல்நலக்குறைவு - கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்!
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.
கடைசி மன்னர்
கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார்.

அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மரணம்
மக்களாட்சி மலர்ந்த நிலையில்பின்னர் நாடு திரும்பினார். இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெண்டைன் இன்று மரணமடைந்தார்.
வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக தனது 82 வயதில் மரணமடைந்தார்.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil