கிரீஸ் நாட்டில் திருடுபோன பிக்காசோ, மாண்ட்ரியன் ஓவியங்கள்- 8 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுப்பு!
கிரீஸ் நாட்டில் 2012ம் ஆண்டு பிக்காசோ, மாண்ட்ரியன் திருடப்பட்ட கலைப்படைப்புகள் தற்போது மீட்கப்பட்டிருப்பதாக கிரேக்க போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள நாட்டில் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகத்தில் பிரபலமான இரண்டு கலைப்படைப்பான புகைப்படங்கள் திருடப்பட்டன.
தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு அப்புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த 2 ஓவியங்களும் 20ம் நூற்றாண்டின் ஜாம்பவான்களான Pablo Picasso மற்றும் Piet Mondrian வரைந்த புகழ்பெற்ற கலைப்படைப்புகளாகும். மீட்கப்பட்ட இந்த 2 ஓவியங்களின் தற்பதையே நிலை குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
மீட்கப்பட்ட பிக்காசோ ஒரு க்யூபிஸ்ட் பெண்ணின் மார்பளவு ஓவியமாகும்.
இதனை 1949-ம் ஆண்டில் ஸ்பெயின் ஓவியர் பாப்லோ பிக்காசோ, இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக “கிரேக்க மக்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக” கிரீஸ் நாட்டிற்கு நன்கொடையாக அளித்தார்.
மற்றோரு ஓவியம், டச்சு ஓவியரான மொண்ட்ரியன் 1905-ம் ஆண்டு வரைந்த ஆற்றங்கரை காற்றாலை ஓவியமாகும். கடந்த 2012 ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில், 16ம் நூற்றாண்டின் இத்தாலிய ஓவியர் குக்லீல்மோ காகியா வரைந்த ஒரு மதக் காட்சியின் 'பேனா மற்றும் மை' வரைபடத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
ஏறக்குறைய ஏழு நிமிடங்களில் இந்த திருட்டு நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.