பூமிக்கு திரும்பிய ராக்கெட்; கச்சிதமாக ‘கேட்ச்’ செய்த ஸ்பேஸ் எக்ஸ் - வைரல் வீடியோ

Viral Video United States of America Elon Musk SpaceX
By Sumathi Oct 14, 2024 08:00 AM GMT
Report

சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

 பூஸ்டர் ராக்கெட்

அமெரிக்கா, சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து அந்நிறுவனம் தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது.

super heavy booster rocket

அது இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி தனியாக பிரிந்தது.

இந்நிலையில், 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து டெக்சாஸ் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது.

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

கச்சிதமான கேட்ச்

அதனை ’மெக்காஸில்லா’ எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளால் கேட்ச் செய்தது பெரும் கவனம் பெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், பலர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.