புதிய சாதனை..ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் - அசத்திய ஸ்பேஸ் எக்ஸ்!

United States of America SpaceX Florida
By Swetha Apr 01, 2024 08:09 AM GMT
Report

ஒரே நேரத்தில் 23 கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக நிலை நிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

செயற்கைக்கோள்கள்

உலகில் உள்ள பல நாடுகள் தங்களின் தேவைகளுக்காக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி விண்ணில் நிலை நிறுத்தி பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்பு, தட்பவெப்பம் இன்னும் பல்வேறு தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோளை உபயோகிப்பதால் மிக பெரிய பலனை அளிக்கிறது.

புதிய சாதனை..ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் - அசத்திய ஸ்பேஸ் எக்ஸ்! | Spacex Launched 23 Satellites Simultaneously

அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளியில் பல ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மனிதர்களை விண்ணிற்கு அனுப்பி வெற்றிகரமாக தரை இறங்கி வருகிறார்கள்.

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 - பிரதமர் சூட்டிய பெயருக்கு சர்வதேச அங்கீகாரம்!

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 - பிரதமர் சூட்டிய பெயருக்கு சர்வதேச அங்கீகாரம்!

புதிய சாதனை

இவர்கள் அடுத்த கட்டமாக தற்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனத்தின் சார்பில் நேற்று ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

புதிய சாதனை..ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் - அசத்திய ஸ்பேஸ் எக்ஸ்! | Spacex Launched 23 Satellites Simultaneously

அவை அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதற்காக புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது.

அது வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.