நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 - பிரதமர் சூட்டிய பெயருக்கு சர்வதேச அங்கீகாரம்!
நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயரிட்டதற்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 விண்கலத்தின் விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.
மேலும், நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. அப்போது இந்திய பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு சென்று, விஞ்ஞானிகளை வெகுவாகப் பாராட்டினார்.
பெயருக்கு அங்கீகாரம்
பின்னர் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். மேலும், லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு 'சிவசக்தி' எனவும் பெயர் சூட்டினார்.
இந்நிலையில் சிவசக்தி என்ற பெயரை, கோள்களுக்கு பெயர் சூட்டும் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு தற்போது அங்கீகரித்துள்ளது. பிரதமர் மோடி சூட்டிய பெயருக்கு அங்கீகாரம் கிடைத்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது.