தலையில் விழப்போகும் விண்வெளி குப்பைகள்; பூமி தப்பிக்குமா? அச்சத்தில் விஞ்ஞானிகள்!
விண்வெளி குப்பைகள் பூமி மீது மோதும் அபாயம் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
விண்வெளி குப்பை
ராக்கெட்டை ஏவும்போது அதன் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று விழும். இப்படி விழும் பாகங்கள் குப்பைகளாக மாறுகிறது. செயற்கைக்கோள்களைச் சுற்றியுள்ள ஓடுகளும் (Launch Fairings) விண்வெளி குப்பைகளாக மாறுகின்றன.
மேலும், செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் உடைந்த உபகரணங்களும் குப்பைகளாக பூமியை சுற்றி வருகிறது.
பூமிக்கு பிரச்சனை?
இந்த குப்பைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, சிறிய துகள்களாக பெரும் குப்பைகளாக மாறுகிறது. இவை பல வகைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த குப்பைகள் சில நேரங்களில் வழி தவறி பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. வற்றில் பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடும்.
சில எரியாமல் மனிதர்களின் தலை மீது விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அணைகள், அணுமின் நிலையங்கள், வெடிபொருள் கிடங்குகள் மீது விழுந்தால் பூமிக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.