தங்கக் குவியலில் வாழும் மக்கள்; விண்வெளிக்கு அருகில் வேறு.. அதிசயம் ஆனால் உண்மை!
தங்கச் சுரங்கங்கள் நிறைந்த நகரம் பற்றிய தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
தங்கச் சுரங்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் லா ரின்கோனாடா நகரம் அமைந்துள்ளது. அதன் உயரம் 5,500 மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இது உலகின் மிக உயரமான நகரமாகவும் கருதப்படுகிறது.
மேலும், இது ரின்கோனாடா விண்வெளிக்கு மிக அருகில் உள்ளதான அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது. இதன் மக்கள் தொகை 60 ஆயிரம் என கூறப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இந்நகரத்திற்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன.
விண்வெளிக்கு அருகில்..
சட்டப்படி, இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை. அங்குள்ள ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள், பெண்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர். ஊழியர்கள் 30 நாட்கள் ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து, 31ஆம் தேதி சுரங்கத்தில் இருந்து அவ்வளவு தாதுவையும் எடுக்க அனுமதிக்கின்றனர்.
அந்தத் தாதுவில் இருந்து சுரங்கத் தொழிலாளர்கள் எந்த உலோகத்தைப் பிரித்தாலும் அது அவர்களுடையது.
இங்கு 50 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. இங்குள்ளவர்கள் பழகிவிட்டார்கள், ஆனால் வெளியில் இருந்து யாராவது வந்தால் வாழ்க்கை சுலபமாக இருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.