102 பேருடன் சென்ற விமானம் டிரக் மீது மோதி தீ பிடிப்பு - பயணிகள் அலறல்
பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது டிரக் மீது மோதி தீப்பிடித்தது; இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தீ பிடித்த விமானம்
பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் ஒன்று புறப்படும் போது டிரக் மீது மோதி தீ பிடித்து ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
லிமாவின் விமான நிலையத்தில் 102 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பயணிகள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Aeropuerto de Lima, aparentemente un camión de bomberos ingresó a la pista cuando el avión estaba aterrizando. Información inicial no habla de víctimas, ojalá así sea. (Créditos a su autor) pic.twitter.com/mQW2PSqs66
— Jose Miguel Bestene (@jmbestene) November 18, 2022