அண்ணாமலை இதை மட்டும் பண்ணலைனா 30 தொகுதி மேல ஜெயிச்சிருப்போம் - எஸ்.பி.வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி
அதிமுகவை விட பாஜக அதிக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கோவையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் அவர் கூறியதாவது, அதிமுக தோல்வி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம். கடந்த தேர்தலைவிட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியை விட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். மேலும், அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அதிமுக தலைவர்கள் குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை.
அண்ணாமலை காரணம்
அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன் இருக்கும் பொழுது பாஜக - அதிமுக கூட்டணி நன்றாக தான் இருந்தது.
அண்ணாமலை அதிகம் பேசியதே கூட்டணி பிளவுக்கு காரணம். அதிமுக பாஜக கூட்டணி இருந்திருந்தால் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம்.
சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட போது பெற்ற வாக்குகளை விட அண்ணாமலை குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். கூட்டணியில் இருக்கும் பொது கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். கூட்டணி தர்மத்திலிருந்து விலகினால் அவ்வளவு தான் என பேசியுள்ளார்.