சித்தாந்தத்தில் மாறுபடுகிறோம் ஆனாலும் நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன் - அண்ணாமலை!!
நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில் தமிழக பொறுத்தவரையில் பாஜக தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் பெரிய வெற்றியை பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி பெற முடியவில்லை. பாஜகவுக்கு தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
பாஜக என்று ஒரு கட்சி உள்ளதா? என்று கேட்டவர்களுக்கு வாக்கு சதவீதத்தை அதிகரித்து பதிலடி கொடுத்திருக்கிறோம். கோவை தொகுதியில் பணம் கொடுக்காமல் 4 லட்சம் வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளன.வரும் 2026-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.
வெற்றியை கொண்டாடும் திமுக 6% வாக்குகளை இழந்துள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவையில் பாஜக 2ஆம் இடம் பிடித்துள்ளது.கனிமொழி பாஜகவிற்கு வந்தால், நான் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.
அதிமுக 3-ஆம் இடத்திற்கு சென்றதற்கு அத்தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை என்பதைக் காட்டுகிறது.
அரசியல் சித்தாந்த கருத்து மாறுபாடு இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாராட்டுகிறேன். எனப் பேசினார் அண்ணாமலை.