தலைவராவே நீடிக்கக்கூடாது..நல்லதில்லை - கடுமையாக விமர்சித்த கனிமொழி!!
தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசும் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனிமொழி வெற்றி
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய கனிமொழி கருணாநிதி, 540729 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். கனிமொழிக்கு அடுத்த இடத்தில், அதிமுகவின் வேட்பாளரான சிவசாமி வேலுமணி 147991 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இருவருக்கும் இருக்கும் வித்தியாசம் 392738 வாக்குகள் ஆகும். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 27 பேரையும் டெபாசிட் இழக்க வைத்துள்ளார் கனிமொழி. வெற்றிக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கனிமொழி.
அவர் பேசியது வருமாறு, தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்ல என்பதை தமிழக மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நிறைய பேர் கனவோடு இருந்தார்கள் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்பதை மக்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.
நல்லதல்ல..
அந்த கனவெல்லாம் தற்போது தெளிவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்ப்பது போல் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமும் என்றார்.
தேர்தலுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை விமர்சித்தது குறித்து பேசிய கனிமொழி, கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அண்ணாமலை கேட்பார்.
2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக பதில் அளிக்கிறேன்.
ஆனால், அந்த தகுதி கூட இல்லாத அண்ணாமலை பாஜக தலைவராக இங்கு நீடிப்பது அக்கட்சிக்கு நல்லதல்ல. இவ்வாறு கனிமொழி பதிலளித்தார்.