எதையாவது கிளப்பிவிட்டு குளிர்காயலாம்னு நினைக்கின்றனர்.. அது மட்டும் நடக்காது - எஸ்.பி.வேலுமணி காட்டம்!
எஸ்.பி.வேலுமணி திமுக குறித்து பேசியுள்ளார்.
நிகழ்ச்சி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் நடைபெற்ற அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனப்பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர், "எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்.
கோவை மக்கள் ஈபிஎஸ் முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள். ஈபிஎஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் பெறும். திமுக அரசு எந்த திட்டங்களையும் கோவை மாவட்டத்திற்கு தரவில்லை.
அரசு ஊழியர்கள், சிறுகுறு தொழில் முனைவோர் என அனைவரும் போராட்டம் நடத்தும் சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது. ஒட்டுமொத்த மக்களும் எடப்பாடி பழனிசாமிமீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகின்றனர்" என்றார்.
முன்னாள் அமைச்சர் பேட்டி
இதனை தொடர்ந்து, அவர், "திமுக எதையாவது கிளப்பிவிட்டு குளிர்காயலாம் என சிலர் நினைக்கின்றனர். இதன் பின்புலத்தில் திமுகவினர் உள்ளனர். அதிமுகவின் ஏக்நாத் சிண்டே என்று என்னை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பரப்புவது திமுக தான். ஏக்நாத் ஷிண்டே அவரது கட்சிக்கு துரோகம் செய்தவர். நான் அதிமுககாரன். அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல, யாரையும் பிரிக்க முடியாது.
தந்தை காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கிறேன். எம்.ஜி.ஆர், அம்மா போல தான் ஈபிஎஸ். எப்படியாவது அதிமுகவை பிளவு படுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் திமுக ஐடி விங் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவினரை பிரிக்க முடியாது, எப்போதும் நாங்கள் பிரிய மாட்டோம். அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல, யாரையும் பிரிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.