பாஜகவில் இணையும் எஸ்.பி.வேலுமணி? ஒரே வார்த்தையில் தரமான பதில்!

Tamil nadu AIADMK BJP
By Sumathi Feb 28, 2024 05:45 AM GMT
Report

பாஜகவில் இணைவது தொடர்பான வதந்திக்கு எஸ்.பி.வேலுமணி பதிலளித்துள்ளார்.

பாஜக வதந்தி

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது. இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டுநினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நடைபெற்றது.

sp velumani

இதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, தற்போதைய அரசியல் சூழலில்சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன. இதற்காக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பாராட்ட வேண்டும். திமுக - அதிமுக எப்போதும் ஒன்றுசேராது. அதேபோல, காங்கிரஸ்-பாஜக ஒன்று சேராது.

எதையாவது கிளப்பிவிட்டு குளிர்காயலாம்னு நினைக்கின்றனர்.. அது மட்டும் நடக்காது - எஸ்.பி.வேலுமணி காட்டம்!

எதையாவது கிளப்பிவிட்டு குளிர்காயலாம்னு நினைக்கின்றனர்.. அது மட்டும் நடக்காது - எஸ்.பி.வேலுமணி காட்டம்!

எஸ்.பி.வேலுமணி விளக்கம்

எனவே, இதுகுறித்து எதற்கு பேச வேண்டும்? ஆனால், இதுபோல பேசவைப்பதற்காக சிலர் முயற்சிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளாக நான் ரத்த தானம் செய்து வருகிறேன். என்னைப் பற்றியும், முன்னாள் அமைச்சர் தங்கமணி பற்றியும் சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்புகின்றனர்.

பாஜகவில் இணையும் எஸ்.பி.வேலுமணி? ஒரே வார்த்தையில் தரமான பதில்! | Sp Velumani Clarifies About Joining Bjp

அதிமுக எங்களின் தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்குத்தான் வருவார்கள். யாரும் வெளியே போக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். அப்போது, எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.