பாஜகவில் இணையும் எஸ்.பி.வேலுமணி? கொந்தளித்த அதிமுக செய்தித்தொடர்பாளர்!
எஸ்.பி.வேலுமணி குறித்து பரவிய வதந்திக்கு அதிமுக செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை கூட்டத்துக்கு முன் பெரிய தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான அம்மன் அர்ச்சுனன் உடன் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
எதையாவது கிளப்பிவிட்டு குளிர்காயலாம்னு நினைக்கின்றனர்.. அது மட்டும் நடக்காது - எஸ்.பி.வேலுமணி காட்டம்!
அம்மன் அர்ச்சுனன் விளக்கம்
அப்போது பேசிய அவர், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இது அயோக்கியத்தமான முயற்சி. 1972ல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அதிமுக குடும்பமாக எஸ்பி வேலுமணி குடும்பம் இருந்து வருகிறது.
அவர் பிறக்கிற போதே அதிமுககாரராக பிறந்தார். இவ்வளவு நாட்களாக கட்சிக்காக பணியாற்றியுள்ளார். எப்படி ஜெயலலிதா தலைமையை ஏற்று செயல்பட்டோரோ, அதற்கு நிகராக தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையையும் ஏற்று எஸ்பி வேலுமணி செயல்பட்டு வருகிறார்.
எனவே, பாஜகவில் இணைவதாக சொல்லப்படும் சிறு பேச்சுக்கு கூட இடமில்லை. அந்த சிந்தனைக்கு கூட இடமில்லை. முழுமையாக நாங்கள் இந்த செய்தியை மறுக்கிறோம் என விளக்கமளித்துள்ளார்.