புதிய ரூபம் எடுக்கும் பிரபல நாடு - மொத்த மக்கள் தொகையில் 20% பேர் இப்படித்தான்..

South Korea
By Sumathi Dec 25, 2024 10:30 AM GMT
Report

பிரபல நாடு ஒன்று முதியோர் நாடாக மாறி வருகிறது.

 மக்கள் தொகை

தென்கொரியாவில் பவுத்த, கிறித்தவ மக்கள் வசிக்கின்றனர். இங்கு மொத்த மக்கள் தொகை 5.17 கோடி. இதில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்தானாம்.

south korea

எனவே, முதியோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடாக மாறி வருகிறது. இதுகுறித்து அந்நாட்டு உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் படி,

எங்கு திரும்பினாலும் ஆணுறுப்பு சிலை.. குடும்பமாக சென்று பார்க்கலாம் - எங்கு தெரியுமா?

எங்கு திரும்பினாலும் ஆணுறுப்பு சிலை.. குடும்பமாக சென்று பார்க்கலாம் - எங்கு தெரியுமா?

முதியோர் நாடு

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.024 கோடியாக உள்ளது. இது மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். அதேபோல், பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு 0.72 சதவீதமாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது.

elderly country

தற்போது நிலவரப்படி, 65 வயது மேற்பட்ட பெண்கள் 22 சதவீதம். அதேநேரத்தில் 18 சதவீதம் பேர் ஆண்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக வயதானவர் சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை super aged society என்று அழைக்கிறது.