எங்கு திரும்பினாலும் ஆணுறுப்பு சிலை.. குடும்பமாக சென்று பார்க்கலாம் - எங்கு தெரியுமா?
வினோதமான ஆணுறுப்பு சிலை பூங்க உருவான கதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆணுறுப்பு சிலை
தென் கொரியாவின் சின்னம் நகரில் ஹேசிண்டாங் என்னும் பூங்கா ஒன்று உள்ளது. இதனை ஆணுறுப்பு பூங்கா என்றும் கூட அழைப்பார்கள். இந்த பூங்கா முழுக்க ஆணுறுப்பு சிலைகளால் நிரம்பி உள்ளதாம். இதை இங்கு குடும்பம் குடும்பமாக வந்து சுற்றிப் பார்ப்பார்களாம்.
இந்த வினோதமான பூங்கா ஏன் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இரண்டு காரணங்களை கூறுகின்றனர். அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு கன்னிப் பெண் ஒருவர் கடற்பாசி அறுவடை செய்யப் புதிதாகத் திருமணமான தனது கணவரின் படகில் சென்றிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் வந்து அழைத்துக் கொள்வதாக அந்த பெண்ணின் கணவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், அந்த பெண்ணை கணவரால் காப்பாற்ற முடியவில்லை. அவள் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டாராம். ஆனால், அதன் பிறகு தான் வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
எங்கு தெரியுமா?
கிராமத்தில் இருந்து சென்ற யாருடைய வலைகளிலும் மீன்கள் சிக்கவில்லை. கன்னிப்பெண்ணின் சாபமே இதற்கு காரணம் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இதன் பிறகு தான் இரண்டு வகை கதை சொல்கிறார்கள்.
ஒன்று அந்த கன்னிப் பெண்ணைச் சமாதானப்படுத்த இதுபோன்ற ஆணுறுப்பு சிலைகளை வைத்ததாக கூறப்படுகிறது. மற்றொரு கதை மிகவும் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த பரிகாரத்தைச் செய்த பிறகு தான் மீன்கள் பிடிக்க முடிந்ததாம்.
இதையடுத்து, கிராம மக்கள் ஆணுறுப்பு சிலைகளை வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் நாளடைவில் இதுவே ஆணுறுப்பு பூங்காவாக மாறிவிட்டதாம். இப்போது இந்த பூங்கவில் 50க்கும் மேல் சிலைகள் உள்ளது. இந்த பூங்காவைப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்து பொதுமக்கள் வருகிறார்கள்.
You May Like This Video