தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு தகுதி இல்லை.. சர்ச்சையை கிளப்பிய விளம்பரம் - வைரல்!
தனியார் நிறுவன வேலை வாய்ப்பு விளம்பரத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வேலை வாய்ப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மௌனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவமுள்ள தொழில்நுட்ப தேவைகளுக்குத் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
மேலும், ஹிந்தி மொழி நன்றாகப் பேச, படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை என்று பதிவில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.மேலும் சொந்த நாட்டுக்குள்ளே பாகுப்பாடு காட்டுவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .