நட்பு நாடுகள் பட்டியலில் .. இந்தியாவை நீக்கிய சுவிட்சா்லாந்து - இந்திய நிறுவனங்களுக்கு வைத்த செக்!
ஜனவரி 1 ம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் இந்திய நிறுவனங்களின் ஈவுத்தொகைக்கு 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலிருந்து சுவிட்சர்லாந்து நாடு நீக்கியுள்ளது. சுவிட்சா்லாந்த நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சுவிட்சா்லாந்து அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மேலும், இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக சுவிட்சா்லாந்து நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் சுவிஸ் முதலீடுகளைப் பாதிக்கப்படும் சுழல் உள்ளது.
சுவிட்சர்லாந்து
மேலும் சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு வரிகளை உயர்த்தப்பட்டுள்ளது.இதுவரை இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த விருப்பத்துக்குரிய நட்பு நாடு என்ற அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக சுவிட்சா்லாந்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான வரி தொடர்பான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.