குழந்தைக்கு யார் பெயர் வைப்பது? குடும்பத்தில் வெடித்த சண்டை -கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!
குழந்தைக்குப் பெயர் வைப்பதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதலில் நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஆண் குழந்தை
கர்நாடக மாநிலம், மைசூருவை சேர்ந்தவர் திவாகர் -அஸ்வினி தம்பதியினர் . இவர்களுக்குக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தது முதலே பெயர் வைப்பதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது.
அதன் பிறகு ,குழந்தைக்கு திவாகர் ஆதி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி வங்கிஷ் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனால், மீண்டும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அஸ்வினி தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும் திவாகர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அப்போது தான் தான் தேர்ந்தெடுத்த பெயரையே குழந்தைக்குச் சூட்டக் கணவரிடம் உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
மோதல்
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதி கோவிந்தையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் என்ன பிரச்சனை.பெயரில் என்ன இருக்கிறது.
குழந்தைக்கு நல்ல பண்பாடு, உயர் கல்வியைக் கொடுங்கள் அதுதான் முக்கியம் என்று கூறினார்.அதன் பிறகு , அனைவரது முன்னிலையிலும் ஆர்யவர்தன் என்ற பெயரை நீதிபதி குழந்தைக்குச் சூட்டினார்.