விவாகரத்து கிடைத்த பெண்; மெகந்தியை வைத்து செய்த வினோத சம்பவம் - வைரல் வீடியோ!
விவாகரத்து கிடைத்ததால் மெகந்தி வைத்துக் கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
விவாகரத்து
குஜராத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார்.
தனக்கு விவாகரத்து கிடைத்ததைத் தனது நண்பர்கள்,தோழிகளுடன் அவர் ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் விருந்து வைத்துக் கொண்டாடாமல் வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார்.
வைரல் வீடியோ
தன்னுடைய கையில் திருமண வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதையை விளக்கும்படி மெகந்தி வரைந்து கொண்டார். அதில் இருமனங்கள் ஒன்றிணைவது, திருமணம் செய்து கொள்வது போலும் , திருமணத்திற்குப் பிறகு கணவரின் குடும்பத்தாரால் அடிமையாக நடத்தப்பட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதனைத் தட்டி கேட்காமல் கணவர் தன்னிடமே வாக்குவாதத்தில் ஈடுபடுவது, இதனால் மனம் நொந்து இறுதியாக விவாகரத்தில் தன்னுடைய திருமண வாழ்க்கை முடிந்துள்ளது போன்ற மெகந்தி வரைந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.