தாய்ப்பாலில் கலந்த நச்சு.. இதுவரை 165,000 பேர் உயிரிழந்த கொடூரம் - வெளியான அதிர்ச்சி Report!
பெண்களின் தாய்ப்பாலில் ஈய நச்சு அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்ப்பால்
பாட்னாவில் மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 பேர்களைக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
இதற்காகப் பீகாரில் உள்ள சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, உள்ளிட்ட 6 மாவட்டங்களின் உள்ள 17 முதல் 40 வயதுக்குட்பட்ட 327 பெண்மணிகளிடமிருந்து தாய்ப்பால், இரத்த மாதிரிகள் , சிறுநீர் மற்றும் குழந்தைகளின் இரத்த மாதிரிகள் ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சோதனையின் முடிவில் மிகவும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த ஆய்வில், 6 மாவட்டங்களில் உள்ள 92 % பெண்களின் தாய்ப்பாலில் 1309 மைக்ரோகிராம் அளவு ஈய நச்சு இருப்பது கண்டறியப்பட்டது.
ஈய நச்சு
இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், உடலில் ஈயத்தின் அளவு 3.5 µg/dLக்கும் குறைவான அளவிலிருந்தால் கூட அது குழந்தைகளின் நுண்ணறிவு, நடத்தை மற்றும் கற்றல் திறன்களைப் பாதிக்கும். ஆனால் 1309 மைக்ரோகிராம் என்பது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பெண்கள் குடிக்கும் தண்ணீர், கோதுமை, அரிசி மற்றும் காய்கறிகளையும் சோதனை நடத்தினர். அதில் 677.2 மைக்ரோ கிராம் ஈயம் உண்ணும் உணவிலிருந்தது தெரியவந்தது.
இதனால் பீகார் மூளை வளர்ச்சி குறைவு , இரத்த சோகை, நரம்பியல், எலும்பு மற்றும் நரம்புத்தசை உள்ளிட்ட பிரச்சனைகளில் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவில் ஈய பாதிப்பினால் ஆண்டு தோறும்165,000 பேர் இறப்பதாக தெரிய வந்துள்ளது