சூர்யகுமார் கேட்ச்சை செக் பண்ணிருந்தா நாங்க ஜெயிச்சிருப்போம் - தென்னாப்பிரிக்க வீரர்
தென்னாப்பிரிக்கா வீரர் ஷம்சி சூர்யகுமார் கேட்ச் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சூர்யகுமார் கேட்ச்
2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா தட்டிச் சென்றது. அதில், சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் தென்னாப்பிரிக்கா வீரர்களின் தூக்கத்தை கெடுத்தது.
ஆனால், அவர் கேட்ச் பிடித்த போது எல்லைக்கோட்டை நிர்ணயிக்கும் குஸ்ஸன் தள்ளிப்போயிருந்ததாகவும், ஒருவேளை அது சரியான இடத்தில் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிருக்கும் என்று பல முன்னாள் வீரர்களால் கூறப்பட்டது.
ஷம்சி சர்ச்சை கருத்து
இந்நிலையில் இதுகுறித்து தென்னாப்பிரிக்கா வீரர் ஷம்சி பகிர்ந்துள்ள வீடியோவில், பேட்ஸ்மேன் பந்தை தூக்கி சிக்ஸ் லைனுக்கு அடிக்கிறார், அதை சிக்சர் லைனில் கேட்ச்பிடித்திவிட்டு ஃபீல்டர் அவுட் என கையைதூக்குகிறார்.
If they used this method to check the catch in the world cup final maybe it would have been given not out ? https://t.co/JNtrdF77Q0
— Tabraiz Shamsi (@shamsi90) August 29, 2024
ஆனால் எதிரணி வீரர்கள் ஒரு கயிற்றை எடுத்துவந்து எல்லைக்கோட்டின் இரு பாய்ண்ட்டையும் பிடித்து நீங்கள் கோட்டிற்கு அந்தப்பக்கம் கால்வைத்துவிட்டீர்கள் இது அவுட்டில்லை என வாக்குவாதம் செய்கிறார்கள்.
மேலும், இதில் “இப்படியான முறையில் சூர்யகுமார் யாதவின் கேட்ச் சரிபார்க்கப்பட்டிருந்தால் அது நாட் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு நகைச்சுவை பதிவு” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.