லக்னோ அணியில் ரோகித் சர்மா? தேவையே இல்லை.. முற்றுப்புள்ளி வைத்த உரிமையாளர்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
ரோகித் சர்மாவை, லக்னோ அணி வாங்க இருப்பதாக வெளியான தகவல் வெளியாகியுள்ளது.
ரோகித் சர்மா
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான விதிகள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், மும்பை அணியில் இருந்து ஜாம்பவான் வீரரான ரோஹித் சர்மா விலக உள்ளதாகவும், மெகா ஏலத்தில் நேரடியாக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக ரோகித் சர்மாவும், மும்பை அணி நிர்வாகமும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அவரை வாங்க லக்னோ மற்றும் டெல்லி அணிகள் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, “ரோகித் சர்மா மெகா ஏலத்தில் பங்கேற்பாரா என்பது உங்களுக்கோ அல்லது யாருக்காவது நிச்சயம் தெரியுமா?
லக்னோ அணி உரிமையாளர் விளக்கம்
யாருக்கும் தெரியாது. அதனால் நாங்கள் வாங்க விரும்புகிறோமா என்ற பேச்சே தேவையற்றது. ஒருவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை ரிலீஸ் செய்து, அவர் ஏலத்தில் பங்கேற்றாலும் லக்னோ அணியின் பர்ஸ் மதிப்பில் உள்ள 50 சதவிகித தொகையை ஒரு வீரருக்காக செலவிட முடியாது.
அவருக்கு 50 சதவிகித தொகையை கொடுத்தால், மீதமுள்ள 22 வீரர்களை வாங்க தொகை போதாமல் போய்விடும் சூழல் உள்ளது. ரோகித் சர்மாவை வாங்க விருப்பமா என்று கேட்டால், நிச்சயம் அவர் சிறந்த வீரர், சிறந்த கேப்டன்.
ஆனால் ஒரு வீரரை வாங்குவது விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல, நம்மிடம் என்ன இருக்கிறது, லக்னோ அணிக்கு என்ன தேவை என்பதை பொறுத்தே வாங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.