பிசிசிஐ உத்தரவை மதிக்காத ஸ்டார் வீரர் - உடனே அணியைவிட்டு நீக்கி அதிரடி?
இந்திய அணி முக்கிய வீரர் ஒருவர் பிசிசிஐ உத்தரவை மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா
ரஞ்சி கோப்பை 2024 தொடரில் விளையாட, இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டது. அதனை அவர் மதிக்கவில்லை. இதனால், தற்போதுவரை அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த பயத்தில் ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற பேட்டர்கள், தற்போது உள்ளூர் தொடர்களில் பந்துவீசவும் ஆரம்பித்துவிட்டனர்.
பிசிசிஐ முடிவு?
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா போன்றவர்களுக்கு, துலீப் டிராபி 2024 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமக்கும் ஓய்வு வேண்டும் எனக் கூறிய ரவீந்திர ஜடேஜாவுக்கு, எவ்வித பதிலும் கூறாமல் அணியைவிட்டு நீக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஜடேஜா ஓய்வு கேட்டிருப்பது கம்பீர், அகார்கர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இஷான் கிஷனை ஓரங்கட்டியதுபோல், ஜடேஜாவையும் ஓரங்கட்ட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Ethirneechal: மீண்டும் அருள்வாக்கு கூறிய அண்ணன்... அதிர்ச்சியில் விசாலாட்சி! குணசேகரனுக்கு முற்றுப்புள்ளியா? Manithan