வெளியேறும் ஸ்டார் வீரர்கள்; மும்பை அணியில் பெரும் சிக்கல் - அம்பானி திட்டம்!
Mumbai Indians
TATA IPL
By Sumathi
8 months ago

Sumathi
in கிரிக்கெட்
Report
Report this article
மும்பை அணியில் இருந்து ஸ்டார் வீரர்கள் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை அணி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், சூர்யகுமார் யாதவும் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மெகா ஏலம்
இதனால், ரோகித் சர்மாவை தக்க வைக்கலாமா இல்லை அவரை இரண்டாவது, மூன்றாவது வீரராக தக்க வைக்கலாமா என்று அணி யோசனையில் உள்ளது.
அவ்வாறு நடந்தால், ரோஹித் சர்மாவின் சம்பளமும் குறையும். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஸ்டார் வீரர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.