அதை பொறுக்க முடியவில்லை; உடைந்த நடாஷா - ஹர்திக்குடன் பிரிவுக்கு காரணம்!
ஹர்திக் மனைவியுடனான பிரிவு குறித்து அவர் குடும்ப நண்பர் ஒருவர் பேசியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா லாக்டவுனில் தங்கள் வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார்.
நான்கு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், 2024 டி20 உலக கோப்பை முடிந்தவுடன் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையி, பிரிவு குறித்து பேசியுள்ள அவர்களின் குடும்ப நண்பர், ஹர்திக் பாண்டியாவின் தனிநபர் பிம்பம் தான் அவர்கள் உறவிற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது.
பிரிவுக்கு காரணம்
திருமணம் ஆனது முதல் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை முறை நடாஷாவிற்கு ஒத்துப் போகவில்லை. ஹர்திக் பாண்டியா எப்போதும் தன் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தனது இமேஜ் முக்கியம் என கருதி, அதற்கான விஷயங்களை மட்டுமே செய்தார்.
ஹர்திக் பாண்டியா ஓடும் வேகத்திற்கு ஏற்ப நடாஷாவால் ஈடு கொடுத்து வாழ்க்கையை நடத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு இடையேயான பிரிவு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் நடாஷா சோர்வடைந்து, இனி பிரிந்து விடலாம் என்ற முடிவை எடுத்தார். இது சில நாட்களில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்து இந்த முடிவை நடாஷா எடுத்து இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
