ஐபிஎல்-க்கு இப்படித்தான் வீரர்களை தேர்வு செய்ராங்க - உண்மை உடைத்த கேஎல் ராகுல்
ஐபிஎல் உரிமையாளர்கள் வீரர்களை தேர்வு செய்வது குறித்து கேஎல் ராகுல் பேசியுள்ளார்.
கேஎல் ராகுல்
நாடு முழுவதும் சிறப்பாக ஆடும் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு வர்களை ஐபிஎல் ஏலத்தில் வாங்க முயற்சி செய்வது வழக்கம்.
அதிக சிக்ஸ் அடித்த வீரர், அதிக பேட்டிங் ஆவரேஜ் கொண்ட வீரர், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் போட்டி அதிகம்.
ஐபிஎல் தேர்வு
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கேஎல் ராகுல், "ஐபிஎல் உரிமையாளர்கள் வியாபார பின்னணியிலிருந்து ஐபிஎல் தொடருக்கு வருகிறார்கள். அவர்கள் ஆய்வு செய்து, தங்கள் அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், அந்த அணிகள் நிச்சயமாக வெல்லும் என சொல்ல முடியாது. ஒரு சிறந்த வீரரை நீங்கள் புள்ளி விவரத்தின் அடிப்படையில் வாங்கலாம்.
ஆனால், சில சமயம் உங்களுக்கு அந்த ஆண்டு மோசமான ஆண்டாக அமையக்கூடும். ஒவ்வொரு வீரருக்கும் விளையாட்டில் மோசமான நாள் என்பது நிச்சயம் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
