அவர்தான் இந்தியா அந்த கோப்பையை ஜெயிக்க காரணம் - அஸ்வின் பாராட்டு
ஷிகர் தவான் தான் இந்தியா கோப்பையை ஜெயிக்க காரணம் என அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உலகிலேயே ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக பேட்டிங் சராசரியை (65.15) கொண்ட வீரராக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்,
அஸ்வின் பாராட்டு
”விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரால் ஷிகர் அதிகமாக கண்டு கொள்ளப்படவில்லை. அவர் சில டாப் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபி முழுவதுமாக ஷிகர் தவான் சாம்பியன்ஸ் ட்ராபி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180+ ரன்கள் அடித்தது எனக்கு பிடித்த அவரின் சிறந்த இன்னிங்ஸ். அதே போல அவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கொண்டாடப்படாத ஹீரோ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
