இந்தியா - தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா

South Africa
1 மாதம் முன்

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடுகிறது. கடந்த 9ம் தேதி தொடங்கிய போட்டி வருகிற 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விலகிய ராகுல்

இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கே.எல்.ராகுல் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷ்ப் பந்த் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலுமே தோல்வி அடைந்தது. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள YS ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி:   பந்துவீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா | South Africa Win The Toss Choose To Bowl First

பந்துவீச்சை தேர்வு செய்த தென் ஆப்ரிக்கா

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் : ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ,கார்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் பட்டேல், ஆவேஷ் கான், யூஷ்வேந்திர சஹால் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் விவரம்: டெம்பா பாவுமா, ஹெண்ட்ரிக்ஸ், டூசன், டேவிட் மில்லர், கிளாசன், வைன் பார்னல், டிவைன் ப்ரிட்டோரியஸ், கேஷவ் மகாராஜ், ஷாம்சி, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தென் ஆப்ரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.    

எவனும் சரியில்லஅதான் தோல்விக்கு காரணம் : கொந்தளித்த கவாஸ்கர்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.