எவனும் சரியில்லஅதான் தோல்விக்கு காரணம் : கொந்தளித்த கவாஸ்கர்
விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இல்லாதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலகுவாக வென்ற தென் ஆப்பிரிக்கா
அதை தொடர்ந்து கட்டாக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்களை இழப்பிற்கு இலகுவாக வெற்றிப்பெற்றது.
பவுலரே இல்லை
இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த தோல்வி குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ரிஷப் பண்ட் தலைமயிலான இந்திய அணியை சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " இந்த அணியில் புவனேஷ்வர் குமாரைத் தவிர விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது முக்கிய பிரச்சினை. நீங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும்.
இரண்டு போட்டிகளிலும், புவனேஷ்வர் குமாரைத் தவிர வேறு யாராவது விக்கெட் வீழ்த்தியது போல் தோன்றியதா? இதனால் தான் முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்தும் இந்திய அணியால் பெற முடியாமல் போனது என தெரிவித்தார்.