ஜெய் பாஜக! மன்னிச்சிடுங்க மோடி ஜி.. தலைகுனிய வைச்சிட்டேன் - வினோஜ் பி செல்வம்!

Tamil nadu BJP Chennai Lok Sabha Election 2024
By Jiyath Jun 04, 2024 01:19 PM GMT
Report

திமுகவுக்கு எதிராக கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம் என்று மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 3,32,908 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஜெய் பாஜக! மன்னிச்சிடுங்க மோடி ஜி.. தலைகுனிய வைச்சிட்டேன் - வினோஜ் பி செல்வம்! | Sorry Modiji Bjp Candidate Vinoj P Selvam

பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் 1,40,537 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட இந்த தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக?

எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக?

ஜெய் பாஜக

இந்நிலையில் இந்த தோல்வி தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் "என்னை மன்னிச்சிடுங்க மோடி ஜி. உங்களை தலைகுனிய வைச்சிட்டேன். தொடர்ந்து போராடி உங்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வேன்.

ஜெய் பாஜக! மன்னிச்சிடுங்க மோடி ஜி.. தலைகுனிய வைச்சிட்டேன் - வினோஜ் பி செல்வம்! | Sorry Modiji Bjp Candidate Vinoj P Selvam

மாற்றம் வெகு தொலைவில் இல்லை. திமுகவுக்கு எதிராக கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம் மத்திய சென்னையின் ஒவ்வொரு பாஜக காரியகர்த்தாவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஜெய் பாஜக" என்று குறிப்பிட்டுள்ளார்.