எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக?
தமிழகத்தின் பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அதில் கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7 சதவீத வாக்குகளை நாதக பெற்றது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படுகிறது.
மூன்றாவது இடம்
அதனை இந்த மக்களவை தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற நாதக முயன்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நிலவரப்படி, நாகப்பட்டினம், திருச்சி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
மேலும், பெரும்பான்மையான இடங்களில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இதனால் அக்கட்சியின் வாக்கு சதவீதம் கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.