பல இடங்களில் அதிமுக - பாஜகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி !!நிலவரம் என்ன?
வெளிவரும் வாக்கு எண்ணிக்கை முன்னிலை இடங்களில் சில இடங்களில் நாம் தமிழர் கட்சி பாஜக அதிமுக கட்சிகளை முந்தியுள்ளது.
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி இம்முறையும் தேர்தலை தனித்தே சந்தித்துள்ளது. 20 ஆண் வேட்பளார்கள், 20 பெண் வேட்பாளர்கள் என களமிறங்கியுள்ள அக்கட்சி, எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
இது எதிர்பார்க்கப்பட்டதே ஆயினும், அக்கட்சி வாக்கு சதவீதம் குறித்து தான் பலரின் கவனம் இருந்தது. அதில், சில இடங்களில் நா.த.க அதிமுக - பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
அதிமுக - பாஜகவை விட
திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுகவை மூஞ்சி வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதே போல, நாகப்பட்டினத்தில் பாஜகவை விட அதிக வாக்குகளை பெற்று 3-ஆம் இடத்தில் உள்ளது நாம் தமிழர் கட்சி.
Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!
ஈரோட்டில் 3-வது இடத்தில் உள்ளது நாம் தமிழர் கட்சி. இங்கு பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரை முந்தியுள்ளது நாம் தமிழர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை சில தினங்களுக்கு முன்பு, பாஜக தனித்து தங்களை விட வாக்குகளை பெற்றால் கட்சியை கலைப்பதாக அதிரடியாக தெரிவித்திருந்தார் சீமான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.