Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!
வெளியாகி வரும் முன்னிலை விவரங்களில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி
இம்முறை பெரிதும் விவாதிக்கப்பட்ட கட்சியாக இருந்தது நாம் தமிழர் கட்சி. சின்னம் பறிபோன விவகாரம் அக்கட்சி குறித்து பேச்சை அதிகரித்தது.
20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் என சரிசமமாக பிரித்து போட்டியிட்டுள்ள அக்கட்சி, தாங்களே கணிசமான இடங்களை பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து பாஜக தங்களை விட அதிக வாக்குகளை பெற்றால், கட்சியை கலைத்து விடுவதாக அதிரடியாக தெரிவித்திருந்தார்.
கடும் போட்டி
தற்போது வெளியாகி வரும் முன்னிலை நிலவரங்களின்படி, ஒரே இடத்தில் கூட நாம் தமிழர் கட்சி முன்னிலை பெறவில்லை. இரண்டாம் இடத்தில் கூட அக்கட்சியின் வேட்பாளராகள் இல்லை.
அதே நேரத்தில், மைக் சின்னத்தில் போட்டியிட்ட திருச்சி மக்களவை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான ஜல்லிக்கட்டு ராஜேஷ், திமுக கூட்டணி வேட்பளரான துரை வைகோவிற்கு கடும் போட்டி கொடுத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.