முந்துகிறாரா விஜயபிரபாகரன்?? விருதுநகர் யாருக்கு - ராதிகா கடும் போட்டி
விருதுநகர் தொகுதி தமிழகத்தில் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
விருதுநகர்
மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இங்கு பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன், திமுக கூட்டணியில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.
இதில், அனைவரின் கவனமும் விஜயபிரபாகரன் மீது தான் உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு தமிழகத்தை பெருமளவில் பாதித்தது. அவரின் தொண்டர்களும் நீண்ட காலம் பிறகு எழுச்சி பெற்றனர்.
விஜயபிரபாகரன் நிலை
வாக்கு சதவீதத்தில் 1%'க்கும் கீழே சென்ற தேமுதிக, இம்முறை கணிசமான வாக்குகளை கைப்பற்றும் என்றே பலரும் கணிக்கிறார்கள். அது போக, அதிமுக கூட்டணியும் உள்ளதால், விஜயபிரபாகரன் வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
வெளியான தேர்தல் கருத்து கணிப்புகளில் மாணிக்கம் தாகூரே வெல்வார் என்று சில செய்திகளும், இழுபறி நீடிக்கும் என்றும் சில கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன.
தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், இன்னும் முன்னிலை நிலவரம் வெளியாகவில்லை.