எகிறும் பாஜக; 2019ஐ விட அதிக வாக்குகள் - தேர்தல் ஆணையம் பரபர தகவல்!

BJP Election Lok Sabha Election 2024
By Sumathi Jun 04, 2024 08:01 AM GMT
Report

2019 மக்களவை தேர்தலை விட அதிக வாக்குகளை பாஜக பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

பாஜக வாக்குகள்

இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது.

எகிறும் பாஜக; 2019ஐ விட அதிக வாக்குகள் - தேர்தல் ஆணையம் பரபர தகவல்! | Bjp Got More Votes Than 2019 Lok Sabha

543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை எதிரொலி; எதிர்பாராத வகையில் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி!

வாக்கு எண்ணிக்கை எதிரொலி; எதிர்பாராத வகையில் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி!

தேர்தல் ஆணையம் 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின் படி, 2019 மக்களவைத் தேர்தலை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக ஆரம்ப 2 மணிநேர தகவல் தெரிவிக்கிறது.

election commision

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் படி 22,199,717 அல்லது 40.43 சதவீத வாக்குகள் பாஜக பெற்றுள்ளது. இது 1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசியல் கட்சியின் அதிகபட்ச வாக்கு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.