வாக்கு எண்ணிக்கை எதிரொலி; எதிர்பாராத வகையில் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி!

India Stock Market Lok Sabha Election 2024
By Swetha Jun 04, 2024 07:26 AM GMT
Report

இந்திய பங்கு சந்தை எதிர்பாராத விதமாக கடும் சரிவை சந்தித்துள்ளது.

இந்திய பங்குசந்தை 

இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் உள்ள நிலவரம்ப்படி பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வாக்கு எண்ணிக்கை எதிரொலி; எதிர்பாராத வகையில் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி! | India Stock Market Crashesdue To Election Result

இந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை காலை தொடங்கியபோதே கடும் சரிவை எட்டியுள்ளது. தற்போதய பங்கு சந்தை நிலவரப்படி, நிப்டி 850 புள்ளிகள் சரிவுடன் 22 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

கருத்துக் கணிப்பு; உச்சத்தில் பங்குச் சந்தை - என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

கருத்துக் கணிப்பு; உச்சத்தில் பங்குச் சந்தை - என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

எதிர்பாராத வீழ்ச்சி

பேங்க் நிப்டி 2 ஆயிரம் புள்ளிகள் சரிவுடன் 48 ஆயிரத்து 800 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 2 ஆயிரத்து 200 புள்ளிகள் சரிவுடன் 74 ஆயிரத்து 300 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது. நிஃப்டி குறியீடு 661.40 புள்ளிகள் சரிந்து 22.602 புள்ளிகளை அடைந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை எதிரொலி; எதிர்பாராத வகையில் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி! | India Stock Market Crashesdue To Election Result

இதனால் சென்செக்ஸ் அதிகப்படியாக 73,659.29 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 22,566.95 புள்ளிகள் சரிந்துள்ளது. நேற்று மிகப்பெரிய உச்சனத்தை கண்ட பங்கு சந்தை இன்று அதே அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.