1.89 லட்ச ஓட்டுகளுடன் 2ஆம் இடத்தில் NOTA! - எந்த தொகுதியில் தெரியுமா?

Indian National Congress BJP India Madhya Pradesh Lok Sabha Election 2024
By Karthikraja Jun 04, 2024 07:51 AM GMT
Report

 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

NOTA 2 ஆம் இடம் 

2024 நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மத்திய பிரதேசத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (4 ஜூன் 2024) நடை பெற்று வருகிறது.

1.89 லட்ச ஓட்டுகளுடன் 2ஆம் இடத்தில் NOTA! - எந்த தொகுதியில் தெரியுமா? | Nota Gets 1 Lack Votes In Indore

இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் தொகுதியில் பாஜக சார்பில் சங்கர் லால்வாணி போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் கடைசி நாளில் வேட்புமனுவை வாபஸ் பெற்று தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்து விட்டார். 

தங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்காளிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

மக்களே...மறக்காமல் நோட்டாவுக்கு வாக்காளியுங்கள் - காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம்!

மக்களே...மறக்காமல் நோட்டாவுக்கு வாக்காளியுங்கள் - காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம்!

இந்நிலையில் 10,10,694 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இதற்கு அடுத்த படியாக 1,81,083 வாக்குகள் பெற்று NOTA இரண்டாம் இடத்தில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் 39,834 வாக்குகள் பெற்று மூத்திரம் இடத்தில உள்ளார்.