Tuesday, May 13, 2025

மக்களே...மறக்காமல் நோட்டாவுக்கு வாக்காளியுங்கள் - காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம்!

Indian National Congress BJP Madhya Pradesh Lok Sabha Election 2024
By Swetha a year ago
Report

காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தீவிரப் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவது வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.

மக்களே...மறக்காமல் நோட்டாவுக்கு வாக்காளியுங்கள் - காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம்! | Congress Seeks Votes For Nota In Madhya Pradesh

இதனால் அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மத்தியப்பிரதேசத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார்.

பிரதமர் மோடியுடன் நேரடியாக விவாதிக்க நான் தயார் அவர் வருவாரா? ராகுல் காந்தி சவால்!

பிரதமர் மோடியுடன் நேரடியாக விவாதிக்க நான் தயார் அவர் வருவாரா? ராகுல் காந்தி சவால்!

நோட்டா

அவர் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுவிட்டார். அக்கட்சியின் சார்பில் அக்சய் காந்தி பாம் என்பவர் களமிறங்கிய நிலையில், கடைசி நாளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

மக்களே...மறக்காமல் நோட்டாவுக்கு வாக்காளியுங்கள் - காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரம்! | Congress Seeks Votes For Nota In Madhya Pradesh

இதனால், பலம்வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் அங்கு பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்காளிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.